ஐ.தே.முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார்: மங்கள சமரவீர

Report Print Steephen Steephen in அரசியல்

மிகவும் சிரமத்திற்கு மத்தியில் அமைக்கப்பட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தை எவருக்கு இலகுவில் கவிழ்க்க இடமளிக்க போவதில்லை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த வருட இறுதியில் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு பின்னர், ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் அமோக வெற்றியை பெறுவார் என்பது உறுதி எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த 12ஆம் திகதி கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் அரசாங்கத்தை கவிழ்க்கும் பேச்சுவார்த்தை தொடர்பாக செய்தியாளர் ஒருவர், மங்களவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த அவர் கடந்த 12ஆம் திகதி தான் இலங்கையில் இருக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

52 நாட்கள் நடந்த சூழ்ச்சியின் போது எவ்வளவு பலம் வாய்ந்தவர்கள் சூழ்ச்சியின் மூலம் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சித்தாலும் அதற்கு எதிராக நேரடியாக செயற்பட்ட நபர் என்ற வகையில், எந்த சூழ்ச்சியாலும் அரசாங்கத்தை கவிழ்க்க இடமளிக்க போவதில்லை என தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும். அப்போது 24 ஆண்டுகளுக்கு பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதியை தெரிவு செய்ய நடவடிக்கை எடுப்போம். அந்த தேர்தல் வெற்றி மிகப் பெரிய தேர்தல் வெற்றியாக அமையும் எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers