மகிந்த அணியினருக்கு ஐ.தே.கட்சியை பிளவுப்படுத்த முடியாது: ஆசு மாரசிங்க

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினருக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நெருக்கடியை ஏற்படுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசியர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் ஐக்கியத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எந்த பிளவுகளும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் ஐக்கியமாக செயற்படும் கட்சி. இதனால், எதிர்காலத்தில் நடத்தப்படும் தேர்தல்கள் உட்பட அனைத்து விடயங்களிலும் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக செயற்படுவோம்.

எமது கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்த முடியாது. நாங்கள் ஒரே அணியாக ஒன்றாக குரல் கொடுக்கும் அணியினர்.

இதனால், மகிந்த ராஜபக்ச கனவு கண்டாலும் எமது கட்சியை வீழ்த்த முடியாது என்பதை அவருக்கு கூறி வைக்க விரும்புவதாகவும் ஆசு மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers