சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை

Report Print Steephen Steephen in அரசியல்

கூட்டு பொது கூட்டணியை ஏற்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் நடத்தும் பேச்சுவார்த்தைகளில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

ராஜபக்ச குடும்பத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் பழக்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விடுப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டிலான் வீரகோன் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம். ராஜபக்ச குடும்பத்தினருடன் எந்த கொடுக்கல், வாங்கலும் இல்லை.

உலகில் ஆடம்பர குடும்பங்கள் அரசியலுக்குள் தொடர்ந்திருப்பதில்லை. இதனால், ராஜபக்ச குடும்பத்தினரை நாங்கள் எதிர்க்கின்றோம்.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதையும் நாங்கள் எதிர்க்கின்றோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுனவுடன் நடத்திய மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் வெற்றியளிக்கவில்லை.

இதனால், அந்த பேச்சுவார்த்தைகளில் இருந்து சுதந்திரக்கட்சி விலகிக்கொள்ள வேண்டும் எனவும் டிலான் வீரகோன் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers