ஜனாதிபதியாக பதவிக்கு வந்ததும் இதைக் கட்டாயம் செய்வேன்: கோத்தபாய

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டின் ஜனாதிபதியாக தான் பதவிக்கு வந்தால், தனக்குள் இருக்கும் இராணுவ ரீதியான குண இயல்புகளை மாற்றிக்கொள்வேன் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் தாம் நடத்திய பேச்சுவார்த்தையின் போது குறிப்பிட்டதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைமையிலான புதிய இடதுசாரி முன்னணியின் பிரதிநிதிகள் கடந்த 16 ஆம் திகதி கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து விசேட யோசனைகளை கோத்தபாயவிடம் கையளித்திருந்தனர்.

கோத்தபாய ராஜபக்ச தனது இராணுவ நிர்வாக குண இயல்புகளை மாற்றிக்கொள்வாரா என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர்கள் அவரிடம் முதலில் கேட்டுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள கோத்தபாய, தான் பல ஆண்டுகள் இராணுவத்தில் சேவையாற்றியதால், தனக்குள் இராணுவத்தின் குண இயல்புகள் இருந்தாலும் நாட்டின் ஜனாதிபதியாக பதவிக்கு வந்தால், அதனை மாற்றிக்கொள்வேன் எனக் கூறியுள்ளார்.

இதனை தவிர நாட்டின் தேசிய சுதந்திரக் கொள்கையை பாதுகாப்பது, நலன்புரி தொடர்பான அரச இலவச கொள்கையை வலுப்படுத்துவது, ஜனநாயகத்திற்கான பொது மக்களின் பங்களிப்பு, கிராமபுற வறுமையை ஒழிப்பது மற்றும் நாட்டின் ஐக்கியத்தை உருவாக்குவது உள்ளிட்ட யோசனைகளை புதிய இடதுசாரி முன்னணியினர் கோத்தபாய ராஜபக்சவிடம் முன்வைத்துள்ளனர்.

Latest Offers