தேனீர் சுவையாளராக பணியாற்றவிருந்த மஹிந்த ராஜபக்ச வாழ்க்கையில் நடைபெற்ற சுவாரஸ்யம்

Report Print Kamel Kamel in அரசியல்

தற்போதைய எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச தேனீர் சுவையாளர் பதவியொன்றை பெற்றுக்கொள்ள முயற்சித்து தோல்வியடைந்த காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.

மஹிந்தவின் தந்தை டி.ஏ. ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த காலத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்தே மஹிந்த பாடசாலை சென்றுள்ளார்.

பாடசாலை கல்வியை பூர்த்தி செய்ததன் பின்னர் நல்ல சம்பளம் கிடைக்கக்கூடிய ஓர் தொழிலை தெரிவு செய்ய வேண்டுமென மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

அதன்படி, அந்தக் காலத்தில் டீ டேஸ்டர் (தேனீர் சுவையாளர்) பதவியொன்றை பெற்றுக்கொள்ள மஹிந்த முயற்சித்துள்ளார்.

அப்போது ஆட்சி நடத்திய ஐக்கியத் தேசியக் கட்சியின் அரசாங்கத்தில் பெருந்தோட்ட விவகாரங்களுக்கு பொறுப்பாக கடமையாற்றிய ஜே.ஆர். ஜயவர்தனவின் சிபாரிசுடன் இந்த பதவியை பெற்றுக்கொள்ள மஹிந்த திட்டமிட்டார்.

இதற்காக குறித்த காலத்தில் நாடாளுமன்ற செயலாளர் நாயகமாக கடமையாற்றிய தெற்கைச் சேர்ந்த சேம் விஜசிங்கவை சந்தித்த மஹிந்தவும் அவரது தந்தையும் விண்ணப்பம் ஒன்றை வழங்கியிருந்தனர்.

அமைச்சர் ஜே.ஆர் ஜயவர்தனவையும் நாடாளுமன்ற பொதுச் செயலாளர் அலுவலகத்தில் வைத்து சந்தித்து தொழில் குறித்து கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.

இதன் போது விண்ணப்பம் பொதுச் செயலாளரிடம் உள்ளது அல்லவா இது சிறிய விடயம் நான் செய்து தருகின்றேன் என ஜே.ஆர் உறுதிளித்தார்.

எனினும் வாரங்கள் மாதங்கள் கடந்தும் குறித்த பணி தமக்கு கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் மஹிந்த குடும்பத்தினர் ஜே.ஆர். மீது கடும் அதிருப்தியில் இருந்தார்கள்.

அதன் பின்னர் மஹிந்த மன விரக்தியுடன் வேறும் ஓர் தொழிலுக்கு சென்றார். இவ்வாறு சில காலம் சென்றதன் பின்னர் மஹிந்தவின் தந்தை இறந்து விட்டார் இதனைத் தொடர்ந்து மஹிந்த நாடாளுமன்றிற்கு தெரிவாகினார்.

நாடாளுமன்றிற்கு தெரிவாகி இரண்டு மூன்று நாட்களில் பொதுச் செயலாளர் மஹிந்தவை அழைத்து அலுவலகத்தில் வைத்து அவரிடம் ஓர் ஆவணத்தை வழங்கினார்.

அந்த ஆவணத்தை பிரித்து பார்த்த போது அது டீ டேஸ்டர் பதவிக்காக வழங்கிய விண்ணப்பம் என்தனை மஹிந்த கண்டு கொண்டார்.

அரசியல் காரணத்திற்காக ஜே.ஆர். தமக்கு பதவியை வழங்கவில்லை என மஹிந்த கூறினார், எனினும், ஜே.ஆர். இந்த உதவியை செய்யவில்லை என கோபம் கொள்ள வேண்டாம் என சேம் விஜேசிங்க தெரிவித்தார்.

ஏனெனில் விண்ணபத்தை தாம் ஜே.ஆரிடம் கொடுக்கவில்லை எனவும், டீ டேஸ்டர் பதவி மஹிந்தவிற்கு பொருந்தாது எனவும் அதனைவிடவும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி சிறந்தது எனவும் சேம் விஜேசிங்க குறிப்பிட்டார்.

இந்த தொழிலை நன்றாக செய்யுங்கள் என்றாவது ஓர் நாள் நாட்டின் நல்லதொரு நிலைக்கு செல்வீர்கள் என பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே சேம் விஜேசிங்க மஹிந்த ராஜபக்சவிற்கு ஆரூடம் கூறியுள்ளார் என சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Latest Offers