முடிவுக்கு வருகின்றது மேல்மாகாண சபையின் ஆட்சிக் காலம்!

Report Print Murali Murali in அரசியல்

மேல் மாகாண சபையின் பதவிக்காலம் நாளை நிறைவடைகிறது. அதற்கான வர்த்தமானி அறிவித்தலில் நாளை கைச்சாத்திடுவதாக மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நாட்டில் ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் மட்டுமே அமுலில் இருக்கும் என்கின்ற போதிலும், அதன் பதவிக்காலமும் எதிர்வரும் ஒக்டோபர் 03ம் திகதியுடன் முடிவுக்கு வரவுள்ளது.

நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களில் வடக்கு, கிழக்கு, வடமேல், மத்திய, வடமத்திய, தெற்கு மற்றும் சப்ரகமுவ ஆகிய ஏழு மாகாணங்களின் பதிக்காலம் முடிவடைந்துள்ளன.

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமை காரணமாக இம் மாகாணங்கள் தற்போது ஆளுநரின் அதிகாரத்தின் கீழுள்ளது.

இவற்றுள் கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்கள் 2017ம் ஆண்டுடனும் வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்கள் 2018ம் ஆண்டுடனும் தென் மாகாணம் 2019ம் ஆண்டுடனும் முடிவுக்கு வந்துள்ளன.

கிழக்கு மாகாணம் 2017ம் ஆண்டு செப்டம்பர் 30ம் திகதியுடனும் வடமத்திய மாகாணம் 2017ம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதியுடனும் சப்ரகமுவ மாகாணம் 2017ம் ஆண்டு செப்டம்பர் 26ம் திகதியுடனும் முடிவுக்கு வந்தன.

வட மாகாணம் 2018 ஒக்டோபர் 24ம் திகதியுடனும் வடமேல் மாகாணம் 2018 ஒக்டோபர் 10ம் திகதியுடனும் மத்திய மாகாணம் 2018ம் ஆண்டு ஒக்டோபர் 08ம் திகதியுடனும் பதிக்காலம் முடிவடைந்தன.

இதேவேளை, தென் மாகாணம் சபையின் காலம் கடந்த 10ம் திகதியுடன் முடிவுக்கு வந்துள்ளது” என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers