வில்பத்து வனப்பகுதி இராணுவத்தின் கீழ்: இரண்டு பெரிய முகாம்களை அமைக்க முடிவு

Report Print Steephen Steephen in அரசியல்

அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகளின் செயற்பாடுகள் காரணமாக ஆபத்தான நிலைமைக்கு உள்ளாகியிருக்கும் வில்பத்து வனப்பகுதியின் பாதுகாப்பை பாதுகாப்பு படையினரின் கீழ் கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

புதிதாக அமுலுக்கு கொண்டு வரப்பட்ட அவசரகால சட்ட விதிகளின் கீழ் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய வில்பத்து வனப் பகுதியில் இரண்டு பெரிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த முகாம்களில் இராணுவ புலனாய்வு பிரிவின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

காடுகள் கைப்பற்றப்படுவதை தடுத்தல், விசா அனுமதியின்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பொறுப்புகள் இந்த இராணுவ முகாம்களுக்கு வழங்கப்பட உள்ளன.

வில்பத்து வனப் பகுதியை அடிப்படையாக கொண்டு நடப்பதாக சந்தேகிக்கப்படும் அடிப்படைவாத பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதே இதன் பிரதான நோக்கம். இரண்டு பிரதான முகாம்கள் அமைக்கப்பட்ட பின்னர் மேலும் சில உப முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.