இரண்டு இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை! சொத்துக்களையும் முடக்குமாறு மைத்திரி அதிரடி உத்தரவு

Report Print Nivetha in அரசியல்

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் ஆகிய இரு அமைப்புகளுக்கும் அவசரகால சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடை செய்வதாக அறிவித்துள்ளார்.

அந்த அமைப்புகளின் அசையும் மற்றும் அசையா சொத்துகளும் முடக்கப்படுவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் செயல்படும் பிற தீவிரவாத அமைப்புகளுக்கும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொலிஸாரால் தேடப்படும் பெண்ணை கிளிநொச்சி தேவாலயத்தில் கண்டேன்! மதகுரு யேசுதாஸ்