அரசாங்கம் சரத் பொன்சேகாவின் திறமையை பயன்படுத்தவில்லை!

Report Print Steephen Steephen in அரசியல்

அடிப்படைவாத பயங்கரவாத தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக தகுதி தராதரம் பார்க்காது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் இந்த சந்தர்ப்பத்தில் சரியான தேவையை பெற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் இந்த சந்தரப்பத்தில் எவர் மீது குறை கூறாது இணைந்து நடந்தது என்ன என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகர சபை உறுப்பினர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இன, கட்சி, நிற பேதங்களை பார்க்காது பாதுகாப்பு தரப்பினர் தமது கடமையை செய்ய இடமளிக்க வேண்டும்.

பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு ஜனாதிபதியை மாத்திரமல்ல, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரையும் அழைக்க வேண்டும்.

அதேபோல் போரை முடிவுக்கு கொண்டு வந்த திறமைசாலியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் அனுபவங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதேவேளை, திறமைசாலிகளுக்கு இடமில்லை. தகுதியற்றவர்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது எனவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.