இலங்கையின் தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவு

Report Print Ajith Ajith in அரசியல்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பிலேயே அமெரிக்காவின் விசாரணை உதவிகள் அமையும் என்று அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களையடுத்து அதற்கான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் மீட்பு முயற்சிகளுக்கும் பரந்துபட்ட ஒத்துழைப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கியுள்ளார்.

ஏற்கனவே அமெரிக்காவுடன் இணைந்து செயற்படும் நாடு என்ற வகையில் இலங்கையும் இந்த உதவியை ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில் இலங்கைக்கு விசாரணையில் உதவும் செயற்பாடு, தற்காலிகமானதே. அத்துடன் குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வருவதே இதன் நோக்கம் என்றும் அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு அமெரிக்க மிலேனிய கடனை வழங்க உடன்பாடு