ஐ.எஸ் பயங்கரவாதத்தை ஒழிக்க தயாராகும் பிரித்தானியா

Report Print Ajith Ajith in அரசியல்

ஐ. எஸ் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவதற்கான உறுதிப்பாட்டை பிரித்தானியா வெளிப்படுத்தியுள்ளது.

கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் இந்த உறுதிப்பாட்டை அறிவித்துள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிராக பிரித்தானியாவின் நிலைப்பாடு தொடர்பில் கர்தினால் மல்கம் ரஞ்சித் எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதன்படி தமது நாட்டிலும் ஏனைய நாடுகளிலும் பயங்கரவாதத்துக்கு எதிரான செயற்பாட்டை பிரித்தானியா மேற்கொள்ளும் என்று உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சர்வதேசமும் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என்று பிரித்தானியா கோரியுள்ளது.

இதேவேளை இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்பில் கடந்த 23ஆம் திகதியன்று பிரித்தானிய வெளியுறவு செயலாளர் ஜெரமி ஹன்ட், தலைமையில் பிரித்தானியா நாடாளுமன்றில் விவாதம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு பிரித்தானியா, எப்போதும் இலங்கைக்கு உதவும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.