பாடசாலை மாணவர்களுக்கான ஓகஸ்ட் மாத விடுமுறை ரத்து?

Report Print Jeslin Jeslin in அரசியல்

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் தாமதமாக ஆரம்பிக்கப்பட உள்ளமையினால், தாமதமடைந்துள்ள கற்றல் நடவடிக்கைகளுக்காக, ஓகஸ்ட் மாத இரண்டாம் தவணை விடுமுறை காலத்தைக் குறைக்கும் நிலை ஏற்படுவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைள் கடந்த மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருந்தது.

எனினும், கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலை அடுத்து, இரண்டாம் தவணை பாடசாலை ஆரம்பம் எதிர்வரும் 6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது.

இந்த நிலையில், கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், பாதுகாப்பு தரப்புடன் கலந்துரையாடியதன் பின்னரே திங்கட் கிழமை இரண்டாம் தவணைக்கு பாடசாலைகளை திறக்க வேண்டும் என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு வாரங்களாக பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக விடுமுறை கிடைத்துள்ளது.

இனி கல்விப் பொதுத்தராதார உயர்தர மற்றும் சாதாரணத் தரப்பரீட்சைகளுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும்.

எனவே எதிர்வரும் காலத்தில் விடுமுறைகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அதற்காக ஆகஸ்ட் மாதம் வழங்கப்படும் விடுமுறையை ரத்துசெய்யவும் ஏற்படலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.