பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் ரத்து

Report Print Kamel Kamel in அரசியல்

பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் மஹ்மூத் குரேசியின் இலங்கை விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கைக்கு விஜயம் செய்யத் திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும் உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு இந்த விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்விருந்தார்.

இதேவேளை, பாகிஸ்தான் ஏ கிரிக்கட் அணியினரும் இதற்கு முன்னதாக இலங்கைக்கான சுற்றுப் பயணத்தை பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.