சீனாவின் புலனாய்வு ஒற்றராக செயற்படும் தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர்! ஆதாரங்களுடன் வெளியான தகவல்

Report Print Steephen Steephen in அரசியல்

ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இலங்கையின் புலனாய்வு சேவையின் தலைவராக கடமையாற்றிய ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவித்தாரண சீனாவின் ஒற்றராக செயற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான தொடர்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆலோசனைகளை அவருக்கு வழங்கும் விசேட வெளியிட்டை கொழும்பு டெலிகிராப் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

கபில ஹெந்தாவித்தாரணவை இயக்கும் சீனாவின் புலனாய்வு அதிகாரி சம்பந்தப்பட்ட தகவல்களை வழங்கும் குரல் பதிவுகளையும் அந்த இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக பதவி வகித்த போது, கபில ஹெந்தாவித்தாரணவை, இராணுவ நடவடிக்கைகளில் சம்பந்தப்படாத விநியோக பிரிவுக்கு பொறுப்பாக நியமித்திருந்தார்.

எனினும் 2006 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவியேற்ற கோத்தபாய ராஜபக்ச, கபில ஹெந்தாவித்தாரணவை மேஜர் ஜெனரல் தரத்திற்கு உயர்த்தி இராணுவ புலனாய்வுப் பிரிவு மற்றும் தேசிய புலனாய்வு சேவையின் தலைவராக நியமித்தார்.

தேசிய புலனாய்வு சேவையின் தலைவர் என்ற வகையில், இலங்கை அனைத்து புலனாய்வு பிரிவுகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனங்களின் முழுமையான அதிகாரம் ஹெந்தாவித்தாரணவுக்கு வழங்கப்பட்டது.

வெள்ளை வான் ஆட்கடத்தில் சம்பவங்கள், ஊடகவியலாளர்கள், பிரகீத் ஹெக்னேலிகொட கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் லசந்த விக்ரமதுங்க கொலை ஆகியவற்றுடன் புலனாய்வு பிரிவின் உறுப்பினர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இந்த சம்பவங்கள் நடந்த போது பாதுகாப்பு செயலாளராக கோத்தபாய ராஜபக்ச பதவி வகித்ததுடன் தேசிய புலனாய்வு சேவையின் தலைவராக ஹெந்தாவித்தாரண கடமையாற்றினார்.

இந்த நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் ஹெந்தாவித்தாரண தேசிய புலனாய்வு சேவையின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதன் பின்னர் ஷெங்கீரிலா ஹோட்டலின் பாதுகாப்பு பிரதானியாக அவருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.

ஷெங்கீரிலா ஹோட்டலை நிர்மாணிக்க இராணுவ தலைமையகத்திற்கு சொந்தமான காணி சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதன் காரணமாக ஹெந்தாவித்தாரணவுக்கு அதன் பாதுகாப்பு பிரதானி பதவி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னர், அந்த பயங்கரவாதத்தை முற்றாக அழிக்க இலங்கை பாதுகாப்பு தரப்பினருக்கு தேவையான உதவிகளை வழங்க அமெரிக்கா தலைமையிலான பல நாடுகள் தமது நிபுணர்கள இலங்கைக்கு அனுப்பியுள்ளன.

ஷெங்கீரிலா ஹோட்டலில் நடந்த தாக்குதலில் சில அமெரிக்க பிரஜைகள் கொல்லப்பட்டனர். இதற்கு அமைய அந்த ஹோட்டலுக்கு சென்ற அமெரிக்க அதிகாரிகள் விசாரணைகளுக்கு உதவியுள்ளனர்.

பயங்கரவாதத்தை இலங்கையில் இருந்து முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே அமெரிக்க தனது உதவியை வழங்கியுள்ளது.

ஷெங்கீரிலா ஹோட்டலில் பிரதான பாதுகாப்பு அதிகாரியாக இருக்கும் கபில ஹெந்தாவித்தாரண, சீன புலனாய்வு சேவையின் முகவராக செயற்பட்டு வருவதை சாட்சியங்களுடன் கொழும்பு டெலிகிராப் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

ஹெந்தாவித்தாரண, கோத்தபாய ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமான நபர் என்பது அவரது வலது கரம் போல் செயற்பட்டவர்.

சீனாவின் ராஜதந்திர தலையீட்டில் அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையில் கட்டியெழுப்படும் நெருங்கிய தொடர்புகளை சீர்குலைக்க நடவடிக்கை எடுக்குமாறு, ஹெந்தாவித்தாரண, தன்னுடன் தொடர்பில் இருக்கும் சீன புலனய்வு பிரிவின் அதிகாரிக்கு தெரிவிக்கும் குரல் பதிவை அந்த இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

மேலும் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இருக்கும் தொடர்புகள் குறித்து தொடர்ந்தும் தேடி அறிய, சீனாவின் ராஜதந்திர வலையமைப்புக்கு அறிவிக்குமாறு ஹெந்தாவித்தாரண, தன்னை வழி நடத்தும் சீன புலனாய்வு அதிகாரியிடம் கூறுகிறார்.

“ இலங்கை, அமெரிக்கா இடையிலான தொடர்புகளுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியும் எதிர்க்கட்சியினருட் பெரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. அமெரிக்காவுக்கு தேவையான தருணத்தில் இலங்கை மண்னை பயன்படுத்த அனுமதி வழங்க அரசாங்கம் தயாராகி வருகிறது.

அமெரிக்காவுக்கு தேவை ஏற்படும் பட்சத்தில் இலங்கை விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை பயன்படுத்த அனுமதி வழங்கவும் அரசாங்கம் தயாராகி வருகிறது. இது குறித்து நான் உன்னிப்பாக அவதானித்து வருகிறேன். அரசாங்கம் இதனை மறுத்துள்ளது.

அவர்களின் உள்நோக்கம் என்ன என்பது எனக்கு தெரியாது. உங்களது ராஜதந்திர வலைமைப்பிடம் இது குறித்து தெளிவுப்படுத்துங்கள். இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் இது பற்றி விசாரிக்குமாறு உங்களது ராஜதந்திர அதிகாரிகளிடம் கூறுங்கள்.” என ஹெந்தாவித்தாரண கூறியுள்ளார்.