தீவிரவாத தாக்குதலின் பின் கோத்தா வெளியிட்ட கருத்தை கடுமையாக சாடும் ஐக்கிய தேசியக் கட்சி

Report Print Nivetha in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வெளியிட்ட கருத்து தகுதியான கருத்து இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தீவிரவாத தாக்குதல் நடந்து மூன்று நாட்கள் முடிவதற்குள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக கோத்தபாய ராஜபக்ச கூறியமை தகுதியான கருத்து இல்லை.

அத்துடன் இது தொடர்பாக மக்களே தீர்மானிக்க வேண்டும். அப்பாவி மக்களின் உயிருடன் அரசியல் செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் செய்வதற்கான நேரம் இது இல்லை என்றும் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.