அப்பாவி முஸ்லீம் மக்களை பழிவாங்காதீர்கள், மகிந்த அணியினரை விசாரியுங்கள்

Report Print Jeslin Jeslin in அரசியல்

நாட்டில் அரங்கேற்றப்பட்ட கொடூரங்கள் தொடர்பாக அப்பாவி முஸ்லிம் மக்களை வருத்தாது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த உள்ளிட்ட அணியினரை விசாரியுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுபப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

அடிப்படைவாதத்தை மையமாகக் கொண்டு ஒரு குழு ஈடுபட்டிருக்கையில், அதற்காக முஸ்லிம்கள் பழிவாங்கப்படுவதும், மனரீதியில் பாதிக்கப்படுவதும் உடனடியாக நிறுத்தப்படவேண்டிய ஒன்றாகும்.

மேலும், தமிழினம் இம்சிக்கப்படுவதை ராணுவம் மகிழ்ச்சியோடு பார்க்கிறது. ராணுவம் இவ்வாறு மகிழ்வுடன் ஒரு இனத்தை அடக்க முயல்கின்றமையானது, இவ்விடயங்களின் பின்னணியில் இராணுவம், புலனாய்வுத்துறை மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் அணியினர் காணப்படுகின்றனர் என்பதை வெளிப்படுத்துகிறது.

எனவே, அப்பாவி முஸ்லிம்களை வருத்தாது, முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட அணியினரை விசாரித்து உண்மையை கண்டறியுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers