படையினரின் சிறந்த நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை நிறைவேற்றம்

Report Print Satha in அரசியல்

எதிர்கால தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை மறுசீரமைப்பது பற்றியும், சமகால நிலைமையில் இருந்து மீண்டெழுந்து எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது பற்றியும் ஆராயப்பட்டதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐ.தே.கட்சியின் நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்களும், தொகுதி அமைப்பாளர்களும் பங்கேற்ற கூட்டம் நேற்று கட்சியின் தலைமையகமான சிரிகொத்தவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

இதேவேளை உயிர்த்தெழுந்த ஞாயிறு சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை ஐ.தே.கவின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அடுத்துவரும் மூன்று மாத காலப்பகுதியில் கூடுதலான வேலை வாய்ப்புக்களும், சமுர்த்தி அனுகூலங்களும் பெற்று கொடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Latest Offers