இலங்கையிலுள்ள வெளிநாட்டு பிரஜைகள் தொடர்பான விடயத்தை சபையில் சுட்டிக்காட்டிய எம்.பி

Report Print Kamel Kamel in அரசியல்

வீசா காலம் பூர்த்தியான சுமார் பத்தாயிரம் பேர் இலங்கையில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

வீசா காலம் பூர்த்தியானதன் பின்னர் நாட்டில் தங்கியிருப்போரில் 50 வீதமான வெளிநாட்டு பிரஜைகள், ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் செயற்பாடுகளை கொண்ட நாடுகளை சேர்ந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யேமன், பலஸ்தீனம், சூடான், ஈரான் உள்ளிட்ட ஐ.எஸ் தீவிரவாத செயற்பாடு உள்ள நாடுகளை சேர்ந்தவர்களே இவ்வாறு இலங்கையில் தங்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் 1670 வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கையில் ஏதிலி அந்தஸ்து கோரி விண்ணப்பம் செய்துள்ளனர் என அவர் நேற்று நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டுப் பிரஜைகளின் எண்ணிக்கையில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகவும் இது குறித்து அவதானம் செலுத்தப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.