மைத்திரி -மகிந்த அணி இடையில் நான்காம் கட்டப் பேச்சு ஆரம்பம்

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய அரசியல் கூட்டணியை ஏற்படுத்துவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான நான்காம் கட்டப் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால, ரோஹன லக்ஷ்மன் பியதாச ஆகியோரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜீ.எல்.பீரிஸ், ஜகத் வெள்ளவத்த உள்ளிட்டோர் கலந்துக்கொண்டுள்ளனர்.