நாட்டின் தற்போதைய நிலைமை முஸ்லிம் சமூகத்தின் தலைவிதியை தீர்மானிக்கலாம்

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டில் தற்போது காணப்படும் அடிப்படைவாத செயற்பாடுகள் முஸ்லிம் சமூகத்தின் தலைவிதியை தீர்மானிக்க அழுத்தங்களை கொடுக்கலாம் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமில் தெரிவித்துள்ளார்.

சிங்கள வானொலி ஒன்றுக்கு நேற்றிரவு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

சிங்களவரும், தமிழர்களும், முஸ்லிம் மக்களும் ஐக்கியமாக இருந்தனர். விடுதலைப் புலிகள் தமிழ் சமூகத்தை பிரித்தனர். தற்போது முஸ்லிம் சமூகத்தை பிரியும் ஆபத்து நெருங்கியுள்ளது.

இதனை முஸ்லிம் சமூகத்தின் தரப்பில் இருந்து எடுத்துக்கொண்டால், இது அவர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் சந்தர்ப்பம்.

தற்போது ஜனநாயக முஸ்லிம் அரசியல் இதனை முடிவுக்கு கொண்டு வரவிட்டால், தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்ட துயரமான விதி முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படும் எனவும் மொஹமட் முஸ்ஸமில் குறிப்பிட்டுள்ளார்.