அரசாங்கத்தின் சட்டங்களை தனிநபர்கள் தம் கைகளில் எடுக்க முடியாது

Report Print Theesan in அரசியல்

தேசத்தின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட சட்டங்களை அமுல்படுத்த பொலிசும் நீதிமன்றங்களும் உள்ள ஜனநாயக இலங்கையில் சில தனிநபர்களும் குழுக்களும் சட்டங்களை பொருற்கோடல் செய்து நீதிபதிகள் போன்று நடக்க முற்படுவது ஜனநாயகத்திற்கு மிகுந்த ஆபத்தான விடயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்றைய தினம் அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

அண்மையில் நடைபெற்ற முஸ்லிம் பெயர் தாங்கிகளின் காட்டு மிராண்டித்தனமான தாக்குதல்களின் பின்பு இந்த நாட்டில் நடைபெற்று வரும் கசப்பான சம்பவங்களை மனித நேயம் கொண்ட எவரும் அங்கீகரிக்க மாட்டார்கள்.

இந்த நாட்டின் மீது அரிய பற்றுக்கொண்ட முஸ்லிம் சமூகம் மேற்கொண்ட துரிதமானதும் விவேகமானதுமான நடவடிக்கைகளினால் இந்த நாட்டுக்கேற்படவிருந்த பாரிய அனர்த்தங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன என்பதை நாட்டுப்பற்றுள்ளோர் விளங்கிக்கொண்டுள்ளனர்.

அதேவேளை ஆங்காங்கு ஒரு சிலர் இனத்துவேஷமான செயற்பாடுகளில் ஈடுபட்டு அரசாங்க சட்டங்களை கையிலெடுப்பதை உடனடியாக கைவிடவேண்டும் இன்றேல் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனைகளை எதிர்நோக்க வேண்டும்.

குறிப்பாக முகத்திரை அணிதலானது ஆண்,பெண் எனும் பாகுபாடின்றி பொதுவாக தடைசெய்யப்பட்டுள்ள போதிலும் பர்தா அணியும் முஸ்லிம் பெண் அரச உத்தியோகத்தர்கள் மீது சிலர் காழ்ப்புணர்வுடன் நடக்க முற்படுவது சட்டவிரோதமான அடிப்படை உரிமை மீறலான செயற்பாடாகும் என தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers

loading...