தீவிரவாதத்தை துரித கதியில் இல்லாதொழிக்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்.
கடும்போக்குவாத தீவிரவாதம் சில நாட்களில் இல்லாது ஒழிக்கக்கூடியதல்ல.
நாட்டின் இயல்பு நிலையை ஏற்படுத்துவது தொடர்பில் மாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடினேன். நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளோம்.
எதிர்காலத்தில் இவ்வாறான ஓர் சம்பவம் இடம்பெறுவதனை தவிர்க்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெசாக் பௌர்ணமி நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் மாநாயக்க தேரர்களிடம் பேசியிருந்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.