புலனாய்வுப் பிரிவின் 7 உத்தியோகத்தர்கள் மட்டுமே விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர் – சாகல

Report Print Kamel Kamel in அரசியல்

புலனாய்வுப் பிரிவின் ஏழு உத்தியோகத்தர்கள் மட்டுமே விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

இருபது புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களில் ஏழு உத்தியோகத்தர்கள் மட்டுமே சிறைகளில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என அவர் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அதிகளவான புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் சட்டத்தின் கீழ் கைதாகியுள்ளதாகவும் தலையீடுகள் எதுவும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைப் புலனாய்வுப்பிரிவில் சுமார் பத்தாயிரம் வரையிலான உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை அரசாங்கம் செய்யவில்லை எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரே மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.