நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை இனவாதமாக மாற்ற முயற்சிக்கும் சிங்கள அடிப்படைவாதிகள்

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டில் நிலவும் நிலைமையை சில சிங்கள அடிப்படைவாதிகள் இனவாதமாக மாற்ற முயற்சித்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையர் என்ற அடிப்படையில் முழு நாட்டிற்கும் ஒரே சட்ட கட்டமைப்பை உருவாக்க தவறியமையே ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகளுக்கு காரணம்.

முஸ்லிம், இந்து, பௌத்த, கிறிஸ்தவம் என மத ரீதியான அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டதன் பிரதிபலனாக நாட்டில் தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஒரு அமைச்சின் கீழ் அனைத்து மத விவகாரங்களும் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அடிப்படைவாதத்தை தடுக்க முடியாது எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.