பிரதமர் ரணில் விக்ரமசிங்க கண்டிக்கு சென்று அஸ்கிரிய, மல்வத்து மற்றும் ராமஞ்ஞை பீடங்களில் மாநாயக்க தேரர்களை சந்தித்துள்ளார்.
முதலில் இன்று முற்பகல் கண்டி மல்வத்து மஹா விகாரைக்கு சென்ற பிரதமர், மாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை சந்தித்து, ஆசி பெற்றதுடன் 30 நிமிடங்கள் கலந்துரையாடியுள்ளார்.
இதனையடுத்து மல்வத்து அநுநாயக்கர் திம்புல்கும்ரே ஸ்ரீ விமலதம்ம தேரரையும் சந்தித்துள்ளார்.
இதன் பின்னர் அஸ்கிரிய விகாரைக்கு சென்ற ரணில் விக்ரமசிங்க, மாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.
அதேவேளை மெனிக்கின்ன ஹூரிகடுவ வித்தியாசாகர மஹா விகாரைக்கு நேற்று மாலை சென்ற பிரதமர், ராமஞ்ஞை பீடத்தின் மாநாயக்கர் நாபானே பேமசிறி தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.