நேரடி விவாதத்திற்கு வருமாறு மாவை சேனாதிராசாவிற்கு அழைப்பு விடுத்த ஆனந்த சங்கரி

Report Print Yathu in அரசியல்

பல்லாயிரம் படுகொலைகள், இழப்புக்கள், தமிழ் மக்களிற்கு செய்த துரோகங்கள் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவை, ஒரு மணிநேரம் தன்னுடன் நேரடி விவாதத்திற்கு வருமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி அழைப்பு விடுத்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பொறுப்பேற்க வேண்டும்.

பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பில் ஊடக அறிக்கைகளை விடுபவர்கள் இதய சுத்தியுடன் அவர்களிற்கு உதவ முன்வரவில்லை. அவர்களை வைத்து அரசியல் இலாபம் தேட முற்படுகின்றனர் என அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.