நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது! ஆனால்...? ஹக்கீம் என்ன கூறுகின்றார்

Report Print Jeslin Jeslin in அரசியல்
790Shares

நாடு மெதுவாக இயல்பான நிலைக்கு திரும்பியுள்ள போதும் சில ஊடகங்களால் தேவையற்ற பதற்றம் ஏற்படுத்தப்படுகின்றது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து இன்றைய தினம் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்.

இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளிலும் இந்த நடவடிக்கையில் அதிகளவிலான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த விடயங்களை நேர்மையுடன் வெளிப்படுத்தும் பங்கு ஊடகங்களுக்கு உண்டு என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அமைச்சர் ரிசாட் பதியுதீன், பைஸர் முஸ்தபா மற்றும் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் M.I.M. ரிஸ்வி ஆகியோரும் கலந்து கொண்டனர்.