அரசியல் நோக்கம் கொண்டு வெளியிடும் கருத்துக்கள் தேசிய ஐக்கியத்திற்கு தடை - ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்

பயங்கரவாத சவாலில் இருந்து நாட்டை விடுவித்து தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளின் போது, அரசியல் நோக்கத்திற்காக சிலர் வெளியிடும் கருத்துக்கள் தடையாக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமான சபையினர் உட்பட முஸ்லிம் சிவில் அமைப்புகளில் பிரதிநிதிகளுடன் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் நாட்டை நேசிக்கும் அனைத்து பிரஜைகளின் பொறுப்பானது அரசியல் நோக்கங்களுக்காக குரல் கொடுப்பது அல்ல. பிரச்சினை தொடர்பாக உண்மையான புரிந்தலுடன் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் அமைதியாக வாழும் சமூக சூழலை கட்டியெழுப்பு பொறுப்பையே நிறைவேற்ற வேண்டும்.

விமர்சனங்கள் அவசியமானது எனினும் அது நியாயமான விமர்சனமாக இருக்க வேண்டும். பகையுடன் கூடிய விமர்சனங்கள் போன்று தகவல்களை வழங்காது புரிதல் இன்றி மேற்கொள்ளப்படும் விமர்சனங்கள் பலனை தராது.

பல்வேறு மதங்களை கொண்ட நாடு என்ற வகையில், எந்த மதத்தவரையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்கக் கூடாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.