சர்வதேச வெசாக் தினத்தினை கொண்டாட ஜனாதிபதி சார்பாக வெளிநாடு செல்லும் அமைச்சர்

Report Print Nivetha in அரசியல்

இந்த வருடம் பெரேரா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திபால சிறிசேன சார்பாக அமைச்சர் காமினி ஜயவிக்ரம வியட்னாம் செல்லவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சர்வதேச வெசாக் தினம் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை வியட்னாமில் கொண்டாடப்படவுள்ளது.

112 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 650 பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

இதேவேளை, அரச வெசாக் வைபவம் காலி நெல்வத்த தொட்டகமுவ ரன்பன் ரஜமகா விகாரையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அரச தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.