அமெரிக்க தூதுவருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் சந்திப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அமெரிக்காவின் தூதுவர் எலைய்னா டெப்லிட்ஸ் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.

இலங்கையின் பாதுகாப்பை பொறுத்தவரை, நட்பு நாடுகளுடன் புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என்று இதன்போது தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

2001 இரட்டைக்கோபுர தாக்குதலின் பின்னர் அமெரிக்கா, அதன் நட்பு நாடுகளுடன் புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.