சற்றுமுன்னர் புதிய சட்ட மா அதிபர் நியமனம்

Report Print Nivetha in அரசியல்

இலங்கையின் புதிய சட்ட மா அதிபராக டப்புல டி லிவேரா சற்றுமுன்னர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் சட்ட மா அதிபராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் டப்புல டி லிவேரா பதில் சட்ட மா அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை, எச்.எம்.காமினி செனெவிரத்ன உள்ளக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராகவும், கே.ஜீ.அசோகா அலவத்த ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராகவும், நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

மேலதிக தகவல் - ஜெசி