பெண் பிள்ளைகளின் பாதுகாப்புக்கே வாள்கள் வைத்திருப்போம் - முஸ்லிம் பிரதிநிதிகளிடம் கூறிய ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்

முஸ்லிம் மக்கள் வாள் போன்ற கத்திகளை தம்வசம் வைத்திருப்பது தொடர்பாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாக சபை மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயம் குறித்து தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவற்றில் வாள்கள் இருந்துள்ளதாகவும் இலங்கை முஸ்லிம் பேரவையின் தலைவர் எம்.எம். அமீன் இந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

ஜனாதிபதியுடன் நடந்த சந்திப்பில் ஜனாதிபதியும் வீட்டில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்புக்கான வாள் போன்ற கத்திகள் வைத்திருப்பது வழமையானது என கூறியிருந்தார்.

அனைத்து வீடுகளிலும் பெண் பிள்ளைகள் மற்றும் சுய பாதுகாப்புக்காக இப்படியான வாள்கள் வைத்திருப்பது வழமை எனவும் அது சம்பந்தமாக கைது செய்யப்படுவது அநீதியானது எனவும் ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்ததாகவும் அமீன் குறிப்பிட்டுள்ளார்.

வாள்களை வைத்துக்கொண்டு முஸ்லிம்கள் ஏதோ ஒன்றை செய்ய போகின்றனர் என உணர்வை ஏற்படுத்த வாய்ப்பு இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ஹக்கீம், செய்திகள் வெளியிடும் விதத்தை பார்க்கும் தேவையற்ற பீதியை ஏற்படுத்துவதாக தெரிகிறது.

முஸ்லிம் மக்கள் மத்தியில் இப்படியான கொடூரமான குழு இருந்தமை குறித்து கவலையடைகின்றோம். இதுதொடர்பாக முஸ்லிம் சமூகம் சுயவிமர்சனம் செய்ய வேண்டும் என்பதுடன் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இந்த பயங்கரவாதத்தின் பின்னணில் வெளிசக்தி இருக்கின்றது. எமது தாய் நாட்டை ஸ்திரமற்ற நிலைமைக்கு கொண்டு சென்று பெரும் சீரழிவை ஏற்படுத்த அந்த சக்திகள் எண்ணியிருக்கலாம். இதற்கு எந்த வகையிலும் இடமளிக்கக் கூடாது எனவும் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படும் முன்னர் மொஹமட் சஹ்ரான் ஹசிமின் செயற்பாடுகள் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகார தரப்புக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுத்ததாக காத்தான்குடி ஜூம்மா பள்ளிவாசலின் பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர்.