இஸ்லாமிய சமய கல்வி நிறுவனங்களை கல்வியமைச்சின் கீழ் கொண்டு வர வேண்டும்

Report Print Steephen Steephen in அரசியல்

இஸ்லாமிய சமய கல்வி நிறுவனங்களை உடனடியாக கல்வியமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என பயங்கரவாத எதிர்ப்பு தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் பல கோணங்களில் செயற்படுகின்றன. இந்த நிறுவனங்கள் முஸ்லிம் சமய விவகாரம் மற்றும் கலாச்சார அமைச்சின் கிழ் உள்ள திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நிறுவனங்கள் பதிவு செய்ய முன்வைத்த ஆவணங்களில் காணப்படும் விடயங்களுக்கு முற்றிலும் மாறானவை அவற்றில் நடக்கின்றன. இந்த கல்வி நிறுவனங்களில் கற்பிக்கும் பாடநெறியை கண்காணிக்க எந்த கட்டமைப்பும் இல்லை என்பது முஸ்லிம் சமயம் மற்றும் கலாச்சார திணைக்களம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இதனால், இந்த இஸ்லாமிய சமய கல்வி நிறுவனங்களில் அடிப்படைவாதம் கற்பிக்கப்படுகிறது என்பது தெளிவான விடயம்.

முஸ்லிம் பிள்ளைகளை சமய அடிப்படைவாதத்தை நோக்கி இட்டுச் சென்று, அவர்களை தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றும் இடமாக இஸ்லாமிய சமய கல்வி நிறுவனங்கள் மாறியுள்ளன.

இதன் காரணமாக இஸ்லாம் சமய கல்வி நிறுவனங்களை கல்வியமைச்சின் கீழ் கொண்டு வர வேண்டும் எனவும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.