சமூகங்கள் பிளவுப்பட்டால் பயங்கரவாதம் வெற்றி பெறும்: ஐரோப்பிய ஒன்றியம்

Report Print Steephen Steephen in அரசியல்

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர், இலங்கை தற்போது தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சவாலை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றிய உயர்ஸ்தானிகர் டுன் லாய் மார்க் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் சமூகங்கள் பிளவுப்படக் கூடாது. ஒற்றுமையாக செயற்பட வேண்டும். சமூகங்கள் பிளவுப்பட்டால், பயங்கரவாதமே வெற்றி பெறும்.

இதற்கு முன்னரும் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையுடன் நெருங்கி செயற்பட்டுள்ளது. இலங்கைக்கு கடந்த 10 ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றியம் 760 மில்லியன் யூரோக்களை மனிதாபிமான உதவியாக வழங்கியுள்ளது.

இலங்கையுடன் காணப்படும் நட்புறவு காரணமாகவே ஐரோப்பிய ஒன்றியம் ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை வழங்கியதாகவும் டுன் லாய் மார்க் குறிப்பிட்டுள்ளார்.