மைத்திரிக்கும் ரணிலுக்குமிடையிலான போட்டியால் இலங்கை எதிர்கொள்ளும் விளைவுகள்...!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

பிரதமரும், ஜனாதிபதியும் போட்டித்தன்மையுடன் செயற்படுகின்றமையானது அவர்களது அரசியல் தேவைகளை சுட்டிக்காட்டுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டின் சுற்றுலாத்துறை பெரும் பாதிப்பை எதிர்நோக்கியிருக்கிறது. இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

கலங்கிய நீர் குட்டைக்குள் மீன் பிடிக்கும் செயற்பாட்டை ஜனாதிபதியும் பிரதமரும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். நாடு எதிர்கொண்டுள்ள நிலையிலும் இவ்விருவரும் போட்டித்தன்மையுடன் செயற்படுவது பல எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.

கடந்த மாதம் 21 ஆம் திகதி தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதலை தொடர்ந்து நாடு பல சவால்களை எதிர்க்கொண்டுள்ளது. தற்போது சுற்றுலாத்துறை நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலும் பிரதமரும், ஜனாதிபதியும் போட்டித்தன்மையுடன் செயற்படுகின்றமையானது இவர்களது அரசியல் தேவைகளை சுட்டிக்காட்டுகின்றது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.