ரணிலிடம் அறிவிக்கவும்... துருக்கி ஜனாதிபதி அனுப்பிய செய்தி

Report Print Steephen Steephen in அரசியல்
472Shares

துருக்கி நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சேதாத் ஓனால் இன்று அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில் சர்வதேச ஒத்துழைப்புகளை வலுப்படுத்துதல், பயங்கரவாத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க துருக்கி இலங்கையுடன் இணைந்து செயற்படும் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் அறிவிக்குமாறு துருக்கி ஜனாதிபதி ரோசோப் தாய்ப் ஏர்டோகான் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் கேட்டுக்கொண்டதாகவும் துருக்கி பிரதி வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

இரண்டு நாடுகளுக்கு இடையில் பொருளாதார, புலனாய்வு மற்றும் இராணுவ ரீதியான ஒத்துழைப்புகளை வலுப்படுத்த பிரதியமைச்சர் விருப்பம் வெளியிட்டுள்ளார்.

மேலும் இலங்கை - துருக்கி இடையிலான பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, சுற்றுலாத்துறைகளில் இருத்தரப்பு தொடர்புகளை தொடர்ந்தும் வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வேகமாக மாறி வரும் உலக சூழலுக்குள் நாடுகளின் சட்ட கட்டமைப்பை வலுப்படுத்தும் தேவை தொடர்பாகவும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.