நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது இது தான்! ஒன்றுபடுவார்களா?

Report Print Steephen Steephen in அரசியல்

நாடு ஸ்திர நிலையில் இருக்கின்றது மற்றும் இயல்பு வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முடியுமாயின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் ஒரே மேசையில் அமர்ந்து நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என மார்ச் 12 அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் அரசியல் பேதமின்றி கூட்டாக நிலவும் நிலைமையை எதிர்கொண்டு, நாட்டின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் எதிர்காலத்திற்காக நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் மூவரும் கூற வேண்டும் என மார்ச் 12 அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையானது தேசிய அனர்த்தம் என்பதால், அனைவரும் ஒரே குரலை எழுப்பி, நாட்டுக்காக அவர்களின் அர்ப்பணிப்பை காட்டுவார்கள் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

எனினும் இன்னும் அரசியல் இலாபம் கருதி, அரசியல்வாதிகள் செயற்பட்டு வருவதை காண முடிகிறது எனவும் ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.