பயங்கரவாதம் பொது எதிரி என்றால் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் - ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்

பயங்கரவாதமே பொது எதிரி என்றால், அதனை அழிக்க இன,மத மற்றும் அரசியல் பேதமின்றி அனைவரும் இணைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியாக ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொண்டு, இனவாதத்தை தூண்டி பிளவுப்பட்டால், பயங்கரவாதிகளே பலம் பெறுவார்கள் என்பதை மறந்து விடக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று பிற்பகல் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

சர்வதேச பயங்கரவாதம் எந்த இடத்திலும் நிரந்தரமாக இருந்ததில்லை என்பதை நாங்கள் அனைவரும் அறிந்துள்ளோம்.

இந்த பயங்கரவாதமும் நிரந்தரமாக தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் அழிந்து விடும். சர்வதேச ரீதியில் இந்த பயங்கரவாதம் அழியும் வரை நாம் நமது நாட்டை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.