புதிய சவால்களை எதிர்நோக்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவோம் - மனோ கணேசன்

Report Print Kamel Kamel in அரசியல்

புதிய சவால்களை எதிர்நோக்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவோம் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவரின் டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது இஸ்லாமிய ஸ்டேட், அடிப்படைவாதத்தின் வருகையினால் தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் சவால்கள் குறித்து ஆராயப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சமூகம் எதிர்நோக்கி வரும் புதிய சவால்களை கூட்டாக இணைந்து எதிர்நோக்குவது என இன்றைய சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.