முஸ்லிம் இனத்தவர்களிடம் ஏற்பட்டுள்ள சந்தேகத்தை இல்லாது செய்யவேண்டும்

Report Print Sindhu Madavy in அரசியல்

30 ஆண்டு கால யுத்தத்தின் ஆரம்ப காலங்களில் இதேபோன்று சிங்கள மக்களிடையே தமிழ் மக்களை நோக்கி சந்தேகப் பார்வை காணப்பட்டது.

இது இரு இனங்களுக்கிடையேயும் அடிப்படையான விரோத தன்மையை ஏற்படுத்தியது என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நாட்டின் பாதுகாப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், இவ்வாறு நாட்டில் முஸ்லிம்கள் தொடர்பாக மற்றைய இனத்தவர்களிடம் ஏற்பட்டுள்ள சந்தேக கண்ணோட்டத்தை இல்லாது செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.