எந்த அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சப் போவதில்லை! ஹிஸ்புல்லா சவால்

Report Print Vethu Vethu in அரசியல்

தனக்கு எதிராக யார் ஹர்த்தால் செய்தாலும் அதற்கு அச்சமடையப் போவதில்லை என கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஹர்த்தால் நடவடிக்கை தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று கருத்து கேட்டது.

“எனக்கு எதிராக யார் ஹர்த்தால் செய்தாலும் நான் அச்சப்பட போவதில்லை. ஜனாதிபதியை தவிர வேறு யாராலும் எனது பதவியை நீக்க முடியாது.

ஹர்த்தாலுக்கு பின்னால் இருப்பவர்கள் யார் என எனக்கு நன்கு தெரியும். தமிழ் மக்கள் சிலரை பொதுஜன பெரமுன கட்சியினை பிடித்துக் கொண்டு ஹர்த்தால் செய்கின்றனர்.

யார் ஹர்த்தால் செய்தாலும் எனக்கு பிரச்சினை இல்லை. என்னை பதவியில் இருந்து நீக்க முடியும். அவ்வாறு நீக்குவதற்கு உரிய காரணங்களை சுட்டிக்காட்ட வேண்டும்.

கந்தளாய் நகரில் கடைகள் மூடப்படும் நாள் ஒன்றை பிடித்துக் கொண்டு இந்த ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.