ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தடுக்க முடியாமல் போனதற்கு இதுவே காரணம்! சம்பவத்தின் பின்னரும்...

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள நிர்வாக சீரற்ற நிலைமை காரணமாகவே ஈஸ்டர் ஞாயிறு நடந்த தாக்குதலை தடுக்க முடியாமல் போனதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டிற்குள் காணப்படும் நிர்வாக சீர்கேட்டால், தேசிய பாதுகாப்பு தொடர்பாக பொறுப்பு மற்றும் தலையீடு முற்றாக கைவிடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலைமை காரணமாக தற்கொலை குண்டுதாரி சுதந்திரமாக வந்து தாக்குதலை நடத்த இடம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

தடுத்திருக்க முடியும் குற்றத்தை. தமது பொறுப்பை தவறவிட்டு அதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த ஆட்சியாளர் இந்த தாக்குதலில் ஒரு குற்றவாளி.

இதனால், கொலையாளிகள் மட்டுமல்ல நாட்டின் ஆட்சியாளர்களும் நடந்த தாக்குதலின் குற்றவாளிகள்.

சம்பவம் நடந்த பின்னர் கூட பொதுமக்களின் பாதுகாப்பை ஆட்சியாளர்கள் உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.