தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அமைச்சர் மனோ கணேசன் பேச்சுவார்த்தை

Report Print Steephen Steephen in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

குறித்த பேச்சுவார்த்தை நாடாளுமன்ற கட்டட தொகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன், தமிழ் மக்கள் உட்பட முழு இலங்கை மக்களும் எதிர்நோக்க நேரிட்ட புதிய சவால் சம்பந்தமாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, அதன் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அமைச்சர் பழனி திகாம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Latest Offers