நாடு இன்னும் வழமைக்கு திரும்பவில்லை: விஜேபால ஹெட்டியாராச்சி

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டின் பாதுகாப்பு நிலைமை சம்பந்தமாக சிலர் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

காலியில் தக்ஷின லங்கா பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாடு இன்னும் சாதாரண நிலைமைக்கு வரவில்லை எனினும் பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களில் பணியாக நடைபெற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டை வழமை நிலைமைக்கு கொண்டு வர வேண்டும். எனினும் நாட்டில் தவறான கருத்தை பரப்பி, நாட்டை சீர்கேடான நிலைமைக்கு மாற்றும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக இவர்கள் அரசாங்கம் குறித்து தவறான கருத்தை பரப்பி வருகின்றனர். அரசாங்கம் அவை அனைத்தையும் நிராகரிக்கின்றது எனவும் ஹெட்டியராச்சி குறிப்பிட்டுள்ளார்.