மத்திய வங்கிக்கு சர்வதேச பொலிஸார் அனுப்பிய 5000 பயங்கரவாதிகளின் பெயர் பட்டியல்

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கையின் நிதி நிறுவனங்களுடன் நிதி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டனரா என்பதை கண்டறிய 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர் பெற்ற பயங்கரவாத உறுப்பினர்களின் பெயர் பட்டியலை, இலங்கை மத்திய வங்கி, சகல நிதி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ளது.

இவர்களின் பயங்கரவாத செயல்களுடன் சம்பந்தப்பட்ட இரகசிய கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்தமாக கண்டறியுமாறு கோரி, சர்வதேச பொலிஸார், மிகவும் இரகசியமான இந்த பெயர் பட்டியலை இலங்கை மத்திய வங்கிக்கு அனுப்பியிருந்தனர்.

இந்த பெயர் பட்டியலில் ஐ.எஸ், அல் - கைதா, தலிபான், விடுதலைப் புலிகள், ஈரானின் பயங்கரவாத அமைப்புகள் மற்றும் கொரியாவின் ஆயுதங்களை விற்பனை செயயும் ஆறு அமைப்பின் முக்கியஸ்தர்களின் பெயர்களும் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பெயர் பட்டியலில் உள்ளவர்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நிதி கொடுக்கல், வாங்கலில் ஈடுபட்டார்களா?

அவர்கள் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்ட வங்கிக் கணக்குகளில் பெயர் விபரங்களை வழங்குமாறு இலங்கை மத்திய வங்கி, நிதி நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.

வெளிநாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் இவர்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளனரா என்பது குறித்து கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.