நீதிபதிகளுக்கு வெளிநாடுகளின் அழுத்தம் - பிரதம நீதியரசரை சந்திக்கும் கூட்டு எதிர்க்கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்

நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொடுக்கப்படும் வெளிநாட்டு அழுத்தங்கள் குறித்து விடயங்களை தெரிவிக்க, கூட்டு எதிர்க்கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற பிரதிநிதிகள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவை சந்திக்க உள்ளதாக நாடாளுமன்ற உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இலங்கை நீதிமன்றங்களில் நீதிபதிகளுக்கு, கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரங்களில் கொடுக்கப்படும் அழுத்தங்கள் தொடர்பாக கடந்த புதன் கிழமை நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிட்டதாகவும் இது சம்பந்தமாக பல தகவல்கள் தன்னிடம் இருப்பதாகவும் கம்மன்பில கூறியுள்ளார்.

இந்த தகவல்கள் குறித்து பிரதம நீதியரசரிடம் தெளிவுப்படுத்துவதே தமது அணியின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் நீதியரசர்களுக்கு அமெரிக்க தூதரகம் அண்மையில் கருத்தரங்கொன்றை நடத்தியதாக உதய கம்மன்பில கடந்த புதன் கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.