முஸ்லிம்கள் பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள் - அவர்கள் மீது சந்தேகம் கொள்ள வேண்டாம்: எஸ்.எம்.மரிக்கார்

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தில் 99 வீதமானவர்கள் அடிப்படைவாத மற்றும் பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்கள் என்பதால், முஸ்லிம்களை சந்தேக கண்கொண்டு பார்க்க வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் அடிப்படைவாதிகள் சிலர் செய்த குற்றத்திற்கு எதிராக தற்போது முஸ்லிம் மக்கள் எழுச்சி பெற்றுள்ளனர்.

சாய்ந்தமருது, மாவனெல்லை , கம்பளை போன்ற பிரதேசங்களில் சாதாரண முஸ்லிம் மக்களே, இஸ்லாமிய அடிப்படைவாதிகளை சட்டத்தின் பிடியில் சிக்க வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவங்களை கட்டுப்படுத்த சமூகத்தை மறுசீரமைப்பது அவசியம். இந்த துயரமான சந்தர்ப்பத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கோரிக்கைக்கு அமைய கத்தோலிக்க சமூகம் அமைதியாகவும் பொறுமையாகவும் நடந்துக்கொண்டமையையும் பாராட்டத்தக்கது எனவும் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.