சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! மைத்திரி எச்சரிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

பொறுப்புக்களில் இருந்து தவறியவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.

அம்பாறையில் நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனைக்குறிப்பிட்டார்.

தாக்குதல் தொடர்பில் தாம் பதவி விலகப்போவதில்லை என்று குறிப்பிட்ட அவர், அமரிக்க இரட்டைக்கோபுர தாக்குதலின்போது எவரும் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

பாரிய தொழில்நுட்பங்களை கொண்டிருந்தபோதும் இரட்டைக்கோபுர தாக்குதலை அமரிக்காவினால் தடுக்கமுடியாமல் போனது.

நாட்டில் இன்று இனங்களுக்கு இடையில் இடைவெளி ஏற்பட்டுள்ளது. என்றும் அவர் கூறினார்.