வேறு எப்பதவி கொடுத்தாலும் ஏற்கமாட்டேன்! சரத் பொன்சேகா கிடுக்குப்பிடி

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

சட்டம் ஒழுங்கு அமைச்சு அல்லாத வேறு எந்தவொரு அமைச்சையும் பொறுப்பேற்க தான் தயாரில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

தனக்கு வேறு ஒரு அமைச்சுப் பொறுப்பை தந்து பாதுகாப்புச் சபையின் ஆலோசகராக இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், சட்டம் ஒழுங்கு அமைச்சு தவிர்ந்த எந்தவொரு அமைச்சையும் நான் பொறுப்பேற்கத் தயாராக இல்லை என்று பதில் வழங்கியுள்ளார்.

முன்னதாக, தேசியப் பாதுகாப்பு தொடர்பில் இலங்கைத் தொழில்துறைசார் நிபுணர்களின் சங்கத்தினால் நேற்று நடத்தப்பட்ட கருத்தரங்கில் பேசிய பொன்சேகா,

முதலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைது செய்து விடுவேன் என்ற அச்சம் காரணமாகவே சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி தமக்கு வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி தமக்கு வழங்கப்படுவதனை தொடர்ச்சியாக ஜனாதிபதி நிராகரித்து வருவதற்கான காரணம் இதுவேயாகும். சட்டத்தை அமுல்படுத்துவது என்பது பழிவாங்குதல் கிடையாது எனவும், குற்றம் இழைத்தவர்கள் தண்டனையை எதிர்நோக்க நேரிடும்.

சட்டத்தை அமுல்படுத்தும் போது யாரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று பொன்சேகா பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.