எந்த அர்ப்பணிப்பையும் செய்ய சுதந்திரக்கட்சி தயார்: நிமல் சிறிபால

Report Print Steephen Steephen in அரசியல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் போன்ற அடிப்படைவாத செயல்கள் மீண்டும் ஏற்படாதிருக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்த அர்ப்பணிப்பையும் செய்ய தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை நேற்று மாலை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நிமல் சிறிபால சில்வாவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்று இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.

அங்கு செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர, அனைத்து கட்சிகளும் எதிர்வரும் தேர்தலை கவனத்தில் கொண்டு செயற்படுவதை நிறுத்தி விட்டு, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் முறை சம்பந்தமாக கலந்துரையாட வேண்டும் என மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.